கலைஞரிடம் கத்திய காட்டி மிரட்டிய இளைஞர்கள்

0
177

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் கலைஞர் (வயது 46), தொழிலாளி. இவர் நேற்று (செப்.,30) கோட்டார் ரெயில் நிலையம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இருளப்பபுரம் பகுதியை சேர்ந்த அனிஷ் (23), பரசுராமன் (24), ராதாகிருஷ்ணன் (27) ஆகியோர் கலைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 150-ஐ பறித்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் அனிஷ் உள்பட 3 பேரையும் கோட்டார் போலீசார் கைது செய்துள்ளனர். இதில் அனிஷ் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here