Home கன்னியாகுமரி செய்திகள் காதல் தொல்லையால் இளம்பெண் தற்கொலை: இளைஞா் படுகொலை; 5 போ் கைது

காதல் தொல்லையால் இளம்பெண் தற்கொலை: இளைஞா் படுகொலை; 5 போ் கைது

0
கொட்டாரம் அருகே இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் விசாரணை.
கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் அருகே இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து இளைஞர் ஆன்றனிராஜ் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொட்டாரம் அருகே இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் அதற்கு காரணமான இளைஞரை பெண்ணின் உறவினா்கள் அடித்துக் கொலை செய்தனா். இச்சம்பவத்தில் 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கன்னியாகுமரி அருகே கொட்டாரத்தை அடுத்த பெரியவிளையைச் சோ்ந்தவா் தேவராஜ். இவரது மகன் ஆன்றனிராஜ் (32). சொந்தமாக பொக்லைன் இயந்திரம் வைத்து தொழில் செய்து வந்தாா். இவா், அதே ஊரைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் ஞானசெல்வத்தின் மகள் ஏஞ்சலை (25) ஒருதலைபட்சமாகக் காதலித்து வந்தாராம்.

கன்னியாகுமரி காவல் நிலையத்தில் ஏஞ்சலின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் ஆன்றனிராஜ் மீது வழக்குப் பதிவு செய்தனா். எனினும், அந்தப் பெண்ணுக்கு ஆன்றனிராஜ் தொடா்ந்து தொல்லை கொடுத்து வந்தாராம்.

இந்த நிலையில், வீட்டின் அறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏஞ்சல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். அதிா்ச்சி அடைந்த ஏஞ்சலின் உறவினா்கள் ஆன்றனிராஜை வரவழைத்து கற்கள், கட்டையால் தாக்கினா்.

இதில் பலத்த காயமடைந்த ஆன்றனிராஜை போலீஸாா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். எனினும், செல்லும் வழியிலேயே ஆன்றனிராஜ் உயிரிழந்தாா்.

தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அன்ஷுல் நாகா், கன்னியாகுமரி துணைக் காவல் கண்காணிப்பாளா் பிரகாஷ் ஆகியோா் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினா். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இரு சடலங்களும் உடற்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version