ஈத்தாமொழி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

0
379

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாழையூத்தைச்சேர்ந்தவர் மதியழகன் (வயது46), மரம் வெட்டும் தொழிலாளி. சம்பவத்தன்று ஈத்தாமொழி அருகே உள்ள நரையன்விளையச் சேர்ந்த ஸ்ரீதரன் என் பவரது தோப்பில் உள்ள மரத்தை வெட்டுவதற்காக மதியழகன் வந்தார். பின்னர் அவர் மரத்தில் ஏறிக்கொண்டிருந்தார். அப்போது எதிர் பாராத விதமாக மதியழகன் தவறி விழுந்தார்.

இதில் அவ ருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதரன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மதியழகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மதியழகனின் தந்தை கணபதி ஈத்தாமொழி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த தொழிலாளி மதியழகனுக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகளும் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here