நாகர்கோவில் மீனாட்சி கார்டன் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மனைவி பேச்சியம்மாள் (39), மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் திடீரென தூக்கில் தொங்கினார். உறவினர்களால் மீட்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.