Home விளையாட்டு செய்திகள் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வோம்: நஜ்முல் ஷான்டோ நம்பிக்கை

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வோம்: நஜ்முல் ஷான்டோ நம்பிக்கை

0

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் தொடரை வெல்வோம் என்று வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ நம்பிக்கை தெரிவித்தார்.இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி வரும் 19-ம் தேதி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று வங்கதேச அணி வீரர்கள் சென்னை வந்தடைந்தனர்.முன்னதாக வங்கதேசத்திலிருந்து புறப்படும்போது டாக்காவில் செய்தியாளர்களிடம் வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஷான்டோ கூறியதாவது: இந்தியாவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் எங்களுக்கு நிச்சயம் சவால் அளிக்கக்கூடியதாக இருக்கும். பாகிஸ்தானில் நடந்து முடிந்த தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு தொடரை முழுமையாக கைப்பற்றினோம். இந்த வெற்றியால் எங்களுக்கு கூடுதல் நம்பிக்கை கிடைத்துள்ளது. ஒவ்வொரு தொடரிலும் அணிக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது.

பாகிஸ்தானில் செய்தது போலவே இந்தியாவிலும் தொடரை வெல்வோம். 2 போட்டிகளையும் வெல்வதற்காக நாங்கள் சிறப்பாக விளையாட முயற்சி செய்வோம். எங்கள் பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதுதான் எங்களது இலக்கு. எங்கள் பணியை சிறப்பாக செய்யும் போது அதற்கான நல்ல பலன்கள் நிச்சயம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version