சேப்பாக்கம் மைதானம் சென்ற ரசிகர்களிடம் விசில் பறிமுதல்

0
15

சென்னை சேப்​பாக்​கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியைக் காணச்சென்ற கிரிக்​கெட் ரசிகர்​களிடம் இருந்து ‘விசில்’ பறி​முதல் செய்​யப்​பட்​ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. தவெக சின்​னம் என்​ப​தால் விசிலுக்கு காவல்​துறை தடை​வி​தித்​துள்​ளதா என்பன போன்ற கேள்வி எழுந்​துள்​ளன.

ஐசிசி டி20 உலகக்​கோப்பை கிரிக்​கெட் தொடர் தற்போதுநடந்து வருகிறது இதன் ஒருபகுதியாக நேற்று சென்னைசேப்​பாக்​கம் கிரிக்​கெட் மைதானத்​தில் நியூஸிலாந்​து- ஆப்​கானிஸ்​தான் அணி​கள் மோதின. சுமார் 21 ஆயிரம் ரசிகர்​கள் போட்​டியைக் காண திரண்​டிருந்​தனர். இதற்காக அங்கு பாது​காப்பு பணி​யில் இருந்த போலீ​ஸார், தடை செய்​யப்​பட்ட தண்​ணீர் பாட்​டில்​கள், பவர் பேங்​கு​கள், குடைகள் மற்​றும் தீப்​பற்​றக்​கூடிய மற்​றும் வெடிக்​கக் கூடிய பொருட்​களை மைதானத்துக்​குள் எடுத்​துச் செல்​கிறார்​களா என கண்​காணித்​தனர். அப்​போது, ரசிகர்​கள் சிலர் வைத்​திருந்த விசில்​களை போலீ​ஸார் உள்ளே கொண்டு செல்ல அனு​ம​திக்​க​வில்​லை.

இதையடுத்​து, சேப்​பாக்​கம் கிரிக்​கெட் மைதானத்​துக்​குள் விசிலுக்கு தடை என்ற செய்தி சமூக வலை​தளங்​களி​லும் வைரலானது. இதையடுத்​து, ரசிகர்​கள் மட்​டும் அல்​லாமல் பல்​வேறு தரப்​பினரும் ‘விசில்’ தடைக்கு கண்​டனம் தெரி​வித்​தனர்.

இதனிடையே ‘விசில்களுக்கு தடை விதிக்​கப்​பட்​டது காவல்​துறை​யின் முடிவு, அதில் எங்​களுக்கு எந்​தத் தொடர்​பும் இல்லை என தமிழ்​நாடு கிரிக்​கெட் சங்​க​மும் விசில் தடைக்கு ஐசிசி-க்​கும், இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யத்​துக்​கும் எந்தத் தொடர்பும் இல்லை என மைதான நிர்​வாக​மும் தெரி​வித்​துள்​ளன. மேலும் போட்டி நடை​பெறும் நாளில் மைதானத்​தைச் சுற்​றி​யுள்ள கடைகளில் விசில் விற்​பனை செய்ய வேண்​டாம் என்று காவல்​துறை அறி​வுறுத்​தி​ய​தாகவும் கூறப்​படு​கிறது.

இதுகுறித்து போலீ​ஸாரிடம் கேட்​ட​போது, ‘கிரிக்​கெட் மைதானத்​துக்​குள் விசில் கொண்டு செல்​ல​வோ, விசில் விற்​பனை செய்​யவோ காவல்​துறை எவ்விதத் தடையும் விதிக்​க​வில்​லை. ஒரு சிலர் இது​போல சமூக வலை​தளங்​களில் தவறான தகவல்​களை பரப்பி வரு​கின்​றனர். இதில் உண்மை இல்​லை’ என விளக்கம் அளித்தனர்.

இருப்​பினும் தேர்தல் நெருங்குவதால் அரசி​யல் காரணங்​களுக்​காக இந்​த தடையை போலீஸார் ஏற்​படுத்தினரா என ரசிகர்​கள் கேள்வி எழுப்பி வரு​கின்​றனர். இதுகுறித்து தவெக ஊடகப்​பிரிவு மாநில ஒருங்​கிணைப்​பாளர் ரமேஷ் கூறும்போது, “தவெக​வுக்கு விசில் சின்​னம் ஒதுக்​கப்​பட்ட பிறகு, அதன் சத்​தத்​தைக் கேட்​டாலே ஆளும்​ அரசு பயப்​படு​கிறது” என்​றார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here