வேர்க்கிளம்பி அருகே ஜமா அத்துக்கு சொந்தமான 4 ஏக்கர் 87 சென்ட் நிலம், சார் பதிவாளர் விடுப்பில் இருந்தபோது தனிநபர் பெயருக்கு பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதை கண்டித்து திருவிதாங்கோடு ஜமாத் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமியர்கள் நேற்று சார் பதிவாளர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். ஜமாத் தலைவர் அன்வர் உசேன் தமிழ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.