கிள்ளியூர், விரிகோடு ரயில்வே மேம்பாலத்தை தற்போதைய பாதைக்கு பதிலாக மாற்றுப் பாதையில் அமைக்க அரசாணை பிறப்பித்ததை எதிர்த்து பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளுக்கு பேரூராட்சி தலைவி பமலா தலைமையில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 5 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் அளவீடு செய்யாமல் திரும்பச் சென்றனர்.