வில்லுக்குறி பேரூராட்சி, மாம்பழத்துறையாறு அணை செல்லும் வழியில் பேரூராட்சியின் வளம் மீட்புபூங்கா உள்ளது. இங்கு ஒரு தனியார் மருத்துவமனை மருத்துவக் கழிவுகளை எரித்த சம்பவம் நடந்தது.
இது குறித்து பொதுமக்கள் பேரூராட்சி அலுவலர், இரணியல் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து இலவச சட்ட உதவி மையம் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி பேரூராட்சி செயல் அலுவலர் ராமு மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் மீது 4 பிரிவின் கீழ் இரணியல் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
            













