Home கன்னியாகுமரி செய்திகள் வெள்ளிமலை: பள்ளி கட்டிட திறப்பு.. தமிழக கவர்னர் பேச்சு

வெள்ளிமலை: பள்ளி கட்டிட திறப்பு.. தமிழக கவர்னர் பேச்சு

0

வெள்ளிமலை அருள்மிகு பாலமுருகன் கல்வி மற்றும் சேவா அறக்கட்டளை சார்பில் செயல்பட்டு வரும் காஞ்சி ஸ்ரீசங்கர வித்யாலயா பள்ளி புதிய கட்டட திறப்பு விழா இன்று மாலை நடந்தது. பள்ளித் தாளாளர் ராஜரெத்தினம் வரவேற்றார். வெள்ளிமலை ஸ்ரீவிவேகானந்த ஆஸ்ரமத் தலைவர் சைதன்யானந்த மகராஜ் ஆசிரியுரை வழங்கினார். பள்ளி முன்னாள் மாணவர்களாகிய டாக்டர்களை கௌரவித்து கட்டடத்தை திறந்து வைத்து தமிழக கவர்னர் ஆர். என். ரவி பேசினார். அவரது உரையில்: – குழந்தைகளை சமுதாயத்தில் நல்லவர்களாக மாற்றுவது கல்வியாகும். 

கல்வி என்பது வர்த்தகம் அல்ல. புனிதமானது. கல்வி கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு தான். ஒவ்வொருவரிடமும் தேசப்பற்று மிகுந்து காணப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மரியாதை கொடுக்க வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உறவுகள் மிக உன்னதமாக இருக்க வேண்டும். நல்ல மாணவர்களை உருவாக்குவது ஆசிரியர்களின் கடமை ஆகும். தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. அதற்கேற்ப மாணவர்கள் தங்களை மேம்படுத்த வேண்டும். எனக்கு பௌதிகவியலில் ஆர்வம் இருந்தது. நான் ஐ.பி.எஸ் ஆகாமல் இருந்திருந்தால் பௌதிக துறையில் பேராசிரியராக சென்றிருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version