குமரி மாவட்டத்தில் உள்ள வள்ளவிளை ஶ்ரீ ராஜராஜேஸ்வரி இசக்கி அம்மன் கோவில் திருவிழாவில் நேற்று இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. பக்தர்கள் பூஜைகள் வைத்து அம்மனை வரவேற்றனர். தீ மிதிக்க விரதமிருந்த பக்தர்கள் தலையில் கும்பம், கையில் தீ சட்டி ஏந்தி தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். குமரி மற்றும் கேரளாவிலிருந்து திரளான பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.














