உத்தராகண்ட் வெள்ளி விழா: ரூ.8,260 கோடியில் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கினார்

0
11

உத்​த​ராகண்ட் மாநிலம் உதய​மாகி 25 ஆண்​டு​கள் ஆனதை முன்​னிட்​டு, அங்கு ரூ.8,260 கோடிக்​கும் மேற்​பட்ட வளர்ச்சி திட்​டங்​களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்​தார்.

உத்​த​ராகண்ட் மாநிலம் உதய​மாகி 25 ஆண்​டு​கள் ஆகி​விட்​டது. இதன் வெள்ளி விழாவை முன்​னிட்டு அங்கு அவர் ரூ.930 கோடிக்​கும் மேற்​பட்ட திட்​டங்​களை தொடங்கி வைத்​தார். ரூ.7,210 கோடி மதிப்​பிலான திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார். இவற்​றில் குடிநீர் , நீர்ப்​பாசனம், தொழில்​நுட்​பக் கல்​வி, எரிசக்​தி, நகர்ப்​புற வளர்ச்​சி, விளை​யாட்டு மற்​றும் திறன்​மேம்​பாடு ஆகிய திட்​டங்​கள் அடங்​கி​யுள்​ளன.

பிஎம் ஃபசல் பீமா யோஜனா திட்​டத்​தின் கீழ், 28,000-க்​கும் மேற்​பட்ட விவ​சா​யிகளுக்கு ரூ.62 கோடியை நிதியை அவர்​களின் வங்கி கணக்​கில் செலுத்த விடு​வித்​தார். பிரதமர் தொடங்​கிய திட்​டங்​கள் மூலம் டேராடூனில் 23 மண்​டலங்​களுக்கு அம்​ருத் திட்​டத்​தின் கீழ் குடிநீர் விநி​யோகிக்​கப்​படும். பிதோ​ராகர் மாவட்​டத்​தில் துணை மின் நிலை​யம் அமைக்​கப்​படும்.

அரசு கட்​டிடங்​களில் சூரிய மின்​சக்தி தகடு​கள் பொருத்​தப்​படும். நைனி​டா​லில் உள்ள ஹல்த்​வானி அரங்​கத்​தில் செயற்கை புல் ஹாக்கி மைதானம் அமைக்​கப்​படும்.

டேராடூனில் நாள் ஒன்​றுக்கு 150 மில்​லியன் லிட்​டர் குடிநீர் விநி​யோகிக்​கும் வகை​யில் சாங் அணை திட்​டத்​துக்கு பிரதமர் அடிக்​கல் நாட்​டி​னார். நைனி​டா​லில் தொடங்​கப்​பட்ட ஜமா​ராணி அணை திட்​டம் மூலம் குடிநீர், நீர்ப்​பாசனம் ஆகியவை வழங்​கப்​படும் மற்​றும் மின் உற்​பத்தி செய்​யப்​படும். சம்​ப​வாட் பகு​தி​யில் துணை மின்​நிலை​யங்​கள், பெண்​கள் விளை​யாட்டு கல்​லூரி உட்பட இதர திட்​டங்​களுக்​கும்​ அடிக்​கல்​ நாட்​டப்​பட்​டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here