மார்ச் 1 முதல் யுடிஎஸ் மொபைல் செயலி நிறுத்தப்படுகிறது – ‘ரயில் ஒன்’ செயலி பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தல்

0
15

இந்​தி​யா​வில் ரயில் சேவை​களை பெறு​வதற்கு பல்​வேறு செயலிகள் பயன்​பாட்​டில் உள்​ளன. இவற்​றில் யுடிஎஸ் செயலி (UTS- Unreserved Ticketing System) முக்​கிய​மானதாகும். இது 2014-ம் ஆண்டு டிசம்​பரில் அறி​முகம் செய்​யப்​பட்​டது.

நடைமேடை டிக்​கெட், சீசன் டிக்​கெட், முன்​ப​தி​வில்​லாத டிக்​கெட்​டு​களை இந்த செயலி​யில் பதிவு செய்து கொள்​ளலாம். இந்​நிலை​யில், யுடிஎஸ் செயலி மார்ச் 1-ம் தேதி முதல் நிறுத்​தப்​படு​வ​தாக ரயில்வே நிர்​வாகம் அறி​வித்​துள்​ளது.

அதே நேரத்​தில், ரயில் ஒன் (RailOne) செயலியை பயன்​படுத்த அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது ஆரம்​பக் கட்​டத்​தில், யுடிஎஸ் செயலி​யில் சீசன் டிக்​கெட் முன்​ப​திவு, புதுப்​பித்​தல் மற்​றும் புதிய பயனர் பதிவு ஆகியவை முடக்​கப்​பட்​டன.

இதைத் தொடர்ந்​து, நடைமேடை டிக்​கெட் பதிவு மற்​றும் ஆர்​-​வாலட், டாப்​-அப் செயல்​பாடு​களும் முடக்​கப்​பட்​டுள்​ளன. யுடிஎஸ் செயலி​யின் சமீபத்​திய பதிப்​பைப் பதி​விறக்​கும் அல்​லது புதுப்​பிக்​கும் பயனர்​கள், அந்​தச் செயலி மூலம் நடைமேடை டிக்​கெட்​டு​களை முன்​ப​திவு செய்​யவோ ஆர்​-​வாலட்-ஐ ரீசார்ஜ் செய்​யவோ அனு​ம​திக்​கப்பட மாட்​டார்​கள்.

யுடிஎஸ் செயலி​யில் உள்ள பயனர்​களின் தற்​போதைய ஆர்​-​வாலட் இருப்பு முற்​றி​லும் பாது​காப்​பாக இருக்​கும். யுடிஎஸ் செயலி நிறுத்​தப்​படு​வ​தால், அதில் உள்ள ஆர்​-​வாலட் இருப்பு காலா​வ​தி​யா​காது. அந்த இருப்பு ‘ரயில்​ஒன்’ செயலி​யில் பயன்​படுத்​தக் கிடைக்​கும்.

டிக்​கெட் பதிவு மற்​றும் பயணி​கள் சேவை​களுக்​காக அதி​காரப்​பூர்வ மொபைல் தளமாக இருக்​கும் ‘ரயில்​ஒன்’ செயலியைப் பதி​விறக்​கம் செய்து பயன்​படுத்த பயணி​கள் அறி​வுறுத்​தப்​படு​கிறார்​கள்.

முன்​ப​திவு இல்​லாத, சீசன் மற்​றும் நடைமேடை டிக்​கெட்​டு​களு​டன் டிக்​கெட் சேவை​களை ‘ரயில்​ஒன்’ செயலி வழங்​கு​கிறது என்று ரயில்​வே அதி​காரி​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here