ஈரான் போர்க் கப்பலை மூழ்கடித்தது அமெரிக்க நீர்மூழ்கி: 87 வீரர்கள் உயிரிழப்பு – மீட்பு பணியில் இலங்கை

0
11

இலங்கை அருகே இந்​தியப் பெருங்​கடல் பகு​தி​யில் ‘ஐஆர்ஐஎஸ் டேனா’ என்ற ஈரான் போர்க்​கப்​பல் மீது அமெரிக்க நீர்​மூழ்கி கப்​பல் தாக்​குதல் நடத்​தி​யது. அதில் இருந்த 87 வீரர்​கள் உயிரிழந்தனர். அவசர அழைப்பு விடுக்​கப்​பட்​ட​தால் மீட்பு பணியில் இலங்கை கடற்​படை மற்​றும் விமானப்​படை ஈடுபட்டுள்ளது.

இந்தக் கப்​பல் இந்​தி​யா​வின் விசாகப்​பட்​டினத்​தில் கடந்த மாதம் நடந்த மிலன் 2026 கூட்​டுப் பயிற்​சி​யில் பங்​கேற்​றது குறிப்பிடத்தக்கது. அணு ஆயுத தடை ஒப்​பந்​தத்துக்கு மறுத்த ஈரான் மீது அமெரிக்கா, இஸ்​ரேல் படைகள் கடந்த மாதம் 28ம் தேதி போர் தொடுத்​தன. ஈரான் பதில் தாக்​குதலில் இறங்​கிய​தால், அதன் கடற்​படையை தகர்க்​கும் பணி​யில் அமெரிக்க கடற்​படை இறங்​கியது.

ஈரான் கடற்​படை​யில் ஒரு நீர்​மூழ்கி கப்​பல் உட்பட 17 போர்க்​கப்​பல்​கள் இருந்​தன. இவற்​றில் 16 போர்க் கப்​பல்​களை அமெரிக்க கடற்​படை அழித்​தது. ‘ஐஆர்ஐஎஸ் டேனா’ என்ற போர்க் கப்​பல் மட்டும் இந்​தியாவின் po;l/ விசாகப்​பட்​டினத்​தில் கடந்த மாதம் 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடந்த சர்​வ​தேச கடற்​படை கூட்​டுப் பயிற்​சி​யில் பங்​கேற்​று​விட்​டு, நேற்று ஈரான் திரும்​பிச் சென்று கொண்​டிருந்​தது.

இந்​நிலை​யில் இலங்கை அருகே இந்​தி​யப் பெருங்​கடல் பகு​தி​யில் ‘டேனா’ போர்க்​கப்​பலை, அமெரிக்க நீர்​மூழ்கி கப்​பல் டார்ப்பிடோ குண்டு மூலம் தாக்​கியது. இதையடுத்து ஈரான் போர் கப்​பலில் இருந்து அவசர அழைப்பு விடுக்​கப்​பட்​டது. சர்​வ​தேச கடல் பகுதியில் எந்த கப்​பலில் இருந்து அவசர அழைப்பு விடுத்​தா​லும், அரு​கில் உள்ள நாடு மீட்புப் பணி​யில் ஈடு​படு​வது சர்​வ​தேச கடமை.

அதன்​படி இலங்கை கடற்​படை கப்​பல்​கள் மற்​றும் விமானப்​படை விமானங்​கள் ஈரான் கப்​பல் மூழ்​கும் இடத்​தில் மீட்புப் பணியை மேற்​கொண்​டன. இந்த கப்​பலில் மொத்​தம் 180 வீரர்​கள் மற்​றும் அதி​காரி​கள் இருந்​தனர். இதில் 87 வீரர்கள் உயிரிழந்தனர். 78 வீரர்கள் காயம் அடைந்​தனர்.

இவர்​களில் 32 கடற்​படை வீரர்​கள் மீட்​கப்​பட்டு இலங்​கை​யின் கலே பகு​தி​யில் உள்ள மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காணா​மல் போன வீரர்​களை தேடும் பணி​யில் இலங்கை கடற்​படை கப்​பல்​கள் மற்​றும் விமானப்​படை விமானங்​கள் ஈடு​பட்​டுள்​ளன. இத்​தகவலை இலங்கை நாடாளுமன்​றத்​தில் வெளி​யுறவுத் ​துறை அமைச்​சர் விஜிதா ஹெராத் தெரி​வித்​தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here