இந்திய அரிசிக்கு கூடுதல் வரி விதிக்கப்படும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் மிரட்டல்

0
17

‘‘இந்​திய பொருட்​களுக்கு ஏற்​கெனவே 50 சதவீத வரி விதிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், அரிசிக்கு கூடு​தலாக வரி விதிக்​கப்​படும்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மிரட்​டல் விடுத்​துள்​ளார்.

உக்​ரைன் மீது போர் தொடுக்​கும் ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை இந்​தியா நிறுத்த வேண்​டும் என்று அமெரிக்கா நிர்​பந்​தித்து வரு​கிறது. அதை மீறி தொடர்ந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால், இந்​திய பொருட்​களுக்கு கூடு​தலாக 25 சதவீதம் வரி விதிக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி அமெரிக்கா​வுக்கு இந்​தியா ஏற்​றுமதி செய்​யும் பொருட்​களுக்கு மொத்​தம் 50 சதவீதம் வரி விதிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் அமெரிக்​கா​வின் அதிபர் மாளி​கை​யான வெள்ளை மாளி​கை​யில் நடை​பெற்ற வேளாண் பிர​தி​நி​தி​கள் வட்ட மேசை மாநாட்​டில் அதிபர் ட்ரம்ப் பங்​கேற்​றார். இந்த கூட்​டத்​தில் கேபினட் அதி​காரி​கள், கரு​வூலத் துறை அமைச்​சர் ஸ்காட் பெசன்ட், வேளாண் துறை அமைச்​சர் புரூக் ரோலின்ஸ் உட்பட பலர் பங்​கேற்​றனர். பல்​வேறு முக்​கிய அம்​சங்​கள் குறித்து ஆலோ​சனை நடத்​திய ட்ரம்ப், விவ​சா​யிகளுக்கு 12 பில்லியன் டாலர் நிதி​யுத​வியை அறிவித்​தார்.

பின்​னர் அமைச்​சர் பெசன்ட்டை பார்த்​து, ‘‘இந்​தி​யா​வுட​னான வர்த்தக நடை​முறையை எனக்கு சொல்​லுங்​கள். வேளாண் விளைபொருட்​களை அமெரிக்கா​வுக்கு இந்​தியா ஏற்​றுமதி செய்​வதை ஏன் அனு​ம​திக்​கிறீர்​கள். அவர்​கள் வரி செலுத்த வேண்​டும்​.அரிசி ஏற்​றும​திக்கு இந்​தியா வரி விலக்கு பெற்​றுள்​ள​தா?’’ என்று கேள்வி எழுப்​பி​னார். அதற்​கு,‘‘இல்​லை… இந்​தி​யா​வுடன் வர்த்தக ஒப்​பந்​தம் குறித்து தொடர்ந்து பேசி வரு​கிறோம்’’ என்று பெசன்ட் பதில் அளித்​தார்.

அதற்கு ட்ரம்ப் கூறுகை​யில், ‘‘அமெரிக்கா​வுக்​குள் அரிசியை இந்​தியா குவிக்க முடி​யும். அப்​படி நடக்​கிறது என்று பிறர் மூலம் அறிந்து கொண்​டேன். அதை அவர்கள் செய்யக் கூடாது. இந்​திய அரிசிகள் மீது கூடு​தல் வரி விதிக்​கப்​படும். அது ஒன்​று​தான் பிரச்​சினையை தீர்க்​கும்’’ என்​றார்.

இதுகுறித்​து, ‘குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்​டிவ்’ (ஜிடிஆர்ஐ) அமைப்​பினர் நிறு​வனர் அஜய் ஸ்ரீவஸ்​தவா கூறிய​தாவது: வர்த்தக லாஜிக் எது​வும் இல்​லாமல் உள்​ளூர் அரசி​யல் காரணங்​களுக்​காகவே அதிபர் ட்ரம்ப் அரிசிக்கு கூடு​தல் வரி விதிப்​பேன் என்று கூறு​வ​தாக தெரி​கிறது. நடப்பு நிதி​யாண்டு 2025-ல் இது​வரை 392 மில்​லியன் டாலர் மதிப்​புள்ள அரிசியை அமெரிக்கா​வுக்கு இந்​தியா ஏற்​றுமதி செய்​துள்​ளது. இது சர்​வ​தேச அளவில் ஏற்​றுமதி செய்​யப்​படும் அரிசி​யின் அளவில் 3 சதவீதம் மட்​டுமே. இந்​தி​யா​வில் இருந்து பாசுமதி அரிசி பெரு​மள​வில் ஏற்​றுமதி செய்​யப்​படு​கிறது.

அதிபர் ட்ரம்ப் கூடு​தல் வரி விதித்​தா​லும் அது இந்​திய ஏற்​றும​தி​யாளர்​களைப் பாதிக்​காது. இந்​திய அரிசிக்கு சர்​வ​தேச அளவில் வலிமை​யான மார்க்​கெட் உள்​ளது. ஆனால், அமெரிக்க மக்​கள்​தான் இதனால் பாதிக்​கப்​படு​வார்​கள்.இவ்​வாறு அஜய் ஸ்ரீவஸ்​தவா கூறி​னார்.

அமெரிக்க மக்​களையே பா​திக்​கும்: இந்​திய அரிசி ஏற்​றும​தி​யாளர்​கள் சம்​மேளனத்​தின் (ஐஆர்​இஎப்) துணைத் தலை​வர் தேவ் கார்க் கூறிய​தாவது: இந்​திய அரிசி ஏற்​றும​திக்கு அமெரிக்கா ஒரு முக்​கிய​மான இடம்​தான். எனினும், சர்​வ​தேச அளவில் இந்​திய அரிசிக்கு நிறைய டிமாண்ட் உள்​ளது. இந்த விஷ​யத்​தில் மத்​திய அரசுடன் நாங்​கள் தொடர்ந்து ஒத்​துழைப்​புடன் செய​லாற்றி வரு​கிறோம். தற்​போதுள்ள வர்த்தக ஒத்​துழைப்பை தொடர்​வதுடன், சர்​வ​தேச அளவில் புதிய மார்க்​கெட்​டில் இந்​திய அரிசியை இடம்​பெற செய்​வதற்​கான நடவடிக்​கைகளை​யும் எடுத்து வரு​கிறோம்.

இந்திய பாசுமதி அரிசிக்கான சந்தையில், சர்​வ​தேச அளவில் அமெரிக்கா 4-வது இடத்​தில் உள்​ளது. பாசுமதி அல்​லாத மற்ற ரக அரிசிக்கான சந்தையில் அமெரிக்கா 24-வது இடத்​தில் உள்​ளது. இந்​திய பாசுமதி அரிசி​யைப் பொறுத்த வரை​யில், வளை​குடா நாடு​கள்​தான் அதி​கம் வாங்​கு​கின்​றன. வளை​குடா நாடு​களில் இந்​திய பாசுமதி அரிசிக்​கான தேவை அதி​கரித்​துக் கொண்டே செல்​கிறது.

இந்​திய உணவு வகைகளுக்கு குறிப்​பாக பிரி​யாணி போன்ற உணவு​கள் மிக​வும் பிரபலமடைந்து வரு​கின்​றன. அதற்கு மாற்​றாக வேறு எது​வும் இல்லை என்ற நிலை உள்​ளது. அமெரிக்​கா​வில் விளைவிக்​கப்​படும் பாசுமதி அரிசி, இந்​திய பாசுமதி அரிசிக்கு ஈடா​காது. ஏனெனில், இந்​திய பாசுமதி அரிசி​யின் நீளம், மணம், சுவை போன்​றவை தனித்​து​வ​மானவை.

கூடு​தல் வரி விதிப்​புக்கு முன்​பு, அமெரிக்கா இறக்​குமதி செய்த பாசுமதி அரிசிக்கு 10 சதவீத வரி​தான் விதிக்​கப்​பட்​டது. அதன்​பிறகு 50 சதவீத​மானது. அதன்​பிறகும் ஏற்​றுமதி நிலைத்​திருக்​கிறது. இது அமெரிக்க மக்​களுக்கு அடிப்​படை முக்​கி​யத்​து​வத்தை வெளிப்​படுத்​து​வ​தாக உள்​ளது. அதே​நேரத்​தில் பாசுமதி உட்பட இந்​திய அரிசிக்கு கூடு​தல் வரி விதித்​தால், அது அமெரிக்க மக்​களையே பாதிக்​கும்.

இந்​திய உற்​பத்​தி​யாளர்​கள் மற்​றும் ஏற்​றும​தி​யாளர்​களுக்கு இது​வரை கிடைத்து வரும் வரு​வா​யில் எந்த பா​திப்​பும் ஏற்​பட​வில்​லை. அமெரிக்​கா​வில் பாசுமதி உட்பட இந்​திய அரிசிக்​கான சில்​லரை விலை​தான் அதி​கரிக்​கும். கூடு​தல் வரி​யின் சுமை அமெரிக்க மக்​களையே பா​திக்​கும். இவ்​வாறு தேவ்​ ​கார்​க்​ கூறியுள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here