தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டேன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்

0
12

தென் ஆப்​பிரிக்​கா​வில் இம்​மாதம் நடை​பெறு​வுள்ள ஜி20 உச்சி மாநாட்​டில் பங்​கேற்​க​ மாட்​டேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறி​யுள்​ளார்.

அமெரிக்​கா​வின் புளோரிடா மாகாணத்​தில் உள்ள மியாமி நகரில் நேற்று முன்​தினம் நடை​பெறற அமெரிக்க வர்த்தக கூட்​டமைப்பு கூட்​டத்​தில் அதிபர் ட்ரம்ப் பங்​கேற்​றார். அப்​போது அவர் பேசி​ய​தாவது:

தென் ஆப்​பிரிக்​கா​வில் ஜி20 மாநாடு நடை​பெறவுள்​ளது. இந்த அமைப்​பில் தென் ஆப்​பிரிக்கா இருக்​கக் கூடாது. ஏனென்​றால் அங்கு நடை​பெறும் விஷ​யங்​கள் மிக மோச​மான​தாக உள்​ளன. அதனால், நான் அங்கு செல்​ல​வில்​லை. ஜி20 அமைப்​புக்கு அடுத்​த​தாக அமெரிக்கா தலைமை தாங்​கு​கிறது. இந்த கூட்​டத்தை மியாமி​யில் உள்ள எனது கோல்ப் கிளப்​பில் நடத்த முன்பு திட்​டமிட்​டிருந்​தேன்.

போரை நிறுத்​தினேன்: இந்​தி​யா​வும் – பாகிஸ்​தானும் கடந்த மே மாதம் போரில் ஈடு​பட்​ட​போது, 8 போர் விமானங்​கள் சுட்டு வீழ்த்​தப்​பட்​டன. இரு நாடு​களும் தொடர்ந்து போரிட்​டால், உங்​களு​டன் மேற்​கொள்​ளும் வர்த்​தகத்தை நிறுத்​து​வேன் என கூறினேன். மறு​நாளே இரு நாடு​களும் போரை நிறுத்​திக் கொண்​டன. இதெற்​கெல்​லாம் காரணம் வரி தான். இல்​லை​யென்​றால் போர் நிறுத்​தம் ஏற்​பட்​டிருக்​காது. 8 மாதங்​களில் நான் 8 போர்​களை நிறுத்​தி​யுள்​ளேன். இவ்​வாறு அதிபர் ட்ரம்ப் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here