ஈரான் போரில் ரூ.29,000 கோடி மதிப்புள்ள அமெரிக்க ராணுவ சொத்துகள் சேதம்: பென்டகன் அதிகாரி தகவல்

0
20

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்​ரேல் கூட்​டுத் தாக்​குதல் தொடங்கி மூன்று வாரங்​கள் நிறைவடைந்துள்ள நிலை​யில், ஈரானின் ஏவு​கணை மற்றும் டிரோன் தாக்​குதல்​களால் அமெரிக்​கா​வின் 3 பில்லியன் டாலர் மதிப்​புள்ள அதாவது இந்​திய மதிப்​பில் சுமார் ரூ.29 ஆயிரம் கோடி மதிப்​பிலான ராணுவத் தளவாடங்​கள் சேதமடைந்​துள்​ள​தாகத் தகவல்​கள் வெளியாகி​யுள்​ளன.

இதுகுறித்து அமெரிக்​கா​விலிருந்து வெளி​யாகும் ‘வால் ஸ்ட்​ரீட் ஜர்​னல்’ நாளிதழ் செய்​தி​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: ஈரான் உடனான மோதல் தொடங்​கிய முதல் மூன்று வாரங்​களில் மட்​டும் அமெரிக்​கா​விற்கு சுமார் 1.4 பில்​லியன் டாலர் முதல் 2.9 பில்​லியன் டாலர் (இந்​திய மதிப்​பில் சுமார் ரூ.13,000 கோடி முதல் ரூ.29,000 கோடி வரை) இழப்பு ஏற்​பட்​டுள்​ள​தாகக் கணக்​கிடப்​பட்​டுள்​ளது.

இதனை பென்​டகன் முன்​னாள் பட்​ஜெட் அதி​காரி எலைன் மெக்​கஸ்​கர் உறு​திப்​படுத்​தி​யுள்​ளார். ஈரான் நடத்​திய தாக்​குதலில் அமெரிக்​கா​வின் அதிநவீன எஃப்​-35 ரக போர் விமானம் ஒன்று பலத்த சேதமடைந்து அவசர​மாகத் தரையிறக்​கப்பட்​டது. மேலும், குவைத் விமானம் தவறு​தலாகச் சுட்​ட​தில் மூன்று எஃப்​-15இ ரக விமானங்​கள் விழுந்து நொறுங்​கின.

ஈராக் வான்​பரப்​பில் இரண்டு எரிபொருள் நிரப்​பும் விமானங்​கள் மோதிக்​கொண்​ட​தில் ஆறு வீரர்​கள் உயிரிழந்​தனர். சவுதி அரேபி​யா​வில் உள்ள இளவரசர் சுல்​தான் விமானப்​படை தளத்​தின் மீது ஈரான் நடத்​திய ஏவு​கணைத் தாக்​குதலில், ஐந்து கேசி-135 ரக விமானங்​கள் சேதமடைந்து தற்​போது பழுது​பார்க்​கப்​பட்டு வரு​கின்​றன.

இது தவிர, சுமார் 12-க்​கும் மேற்​பட்ட அதிநவீன ‘எம்​.கியூ-9 ரீப்​பர்’ வகை ஆளில்லா உளவு விமானங்​கள் சுட்டு வீழ்த்​தப்​பட்​டுள்​ளன. சவுதி அரேபி​யா, கத்​தார் மற்​றும் ஜோர்​டான் ஆகிய நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்​களில் வைக்​கப்​பட்​டுள்ள ரேடார் அமைப்​பு​களும் ஈரானின் தாக்​குதலுக்கு உள்​ளாகி​யுள்​ளன.

கிரீஸ் நாட்​டின் சூடா விரி​கு​டா​வில் நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்ள அமெரிக்​கா​வின் பிரம்​மாண்​ட​மான ‘யுஎஸ்​எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்​டு’ போர்க்​கப்​பலிலும் தீ விபத்து ஏற்​பட்​டுள்​ளது. இதன் மூலம், 3 பில்​லியன் டாலர் மதிப்​பிலான அமெரிக்க ராணுவ சொத்​துகள் பலத்த சேதத்தை சந்​தித்​துள்​ளன. இவ்​வாறு அந்த செய்​தி​யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா​வும் இஸ்​ரேலும் இணைந்து தாக்​குதலைத் தொடங்​கின. இந்த மோதலில் இது​வரை 13 அமெரிக்க வீரர்​கள் உயிரிழந்துள்ளனர்; சுமார் 290 வீரர்​கள் காயமடைந்துள்ளனர். பாதிக்​கப்​பட்ட மற்​றும் இழந்த ராணுவத் தளவாடங்​களை மீண்​டும் வாங்​கு​வதற்​காக சுமார் 200 பில்​லியன் டாலர் கூடு​தல் நிதியை ஒதுக்க அமெரிக்​கப் பாது​காப்​புத் தலை​மையக​மான பென்​டகன்​ திட்​ட​மிட்​டுள்​ள​தாக வால்​ ஸ்ட்​ரீட்​ ஜர்​னல்​ தெரி​வித்​துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here