பாகிஸ்​தானின் எப் 16 போர் விமானங்​களை மேம்​படுத்த அமெரிக்க அரசு ஒப்​புதல்

0
24

பாகிஸ்​தான் விமானப் படை​யின் எப்16 ரக போர் விமானங்​களை மேம்​படுத்த அமெரிக்க அரசு ஒப்​புதல் வழங்கி உள்​ளது. பாகிஸ்​தான் விமானப் படை​யில் எப்16 ரகத்தை சேர்ந்த 76 போர் விமானங்​கள் உள்​ளன.

இவை அமெரிக்க தயாரிப்பு போர் விமானங்​கள் ஆகும். கடந்த 1990-ம் ஆண்டு முதல் எப்16 போர் விமானங்​களுக்கு தேவை​யான உதிரி பாகங்​கள், தொழில்​நுட்​பங்​களை பாகிஸ்​தானுக்கு வழங்க அமெரிக்கா மறுத்து வந்​தது. இதன் ​காரண​மாக பாகிஸ்​தானின் பெரும்​பாலான எப்16 போர் விமானங்​கள் தரை​யிறக்​கப்​பட்டு உள்ளன.

தற்​போது அந்த நாட்​டின் விமானப் படை​யில் சீன தயாரிப்​பான ஜேஎப்​-17எஸ் போர் விமானங்​களே அதிக அளவில் பயன்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. இந்த சூழலில் பாகிஸ்​தானின் எப்16 போர் விமானங்​களை மேம்​படுத்த அமெரிக்க அரசு அண்​மை​யில் ஒப்புதல் வழங்கி உள்​ளது. இதன்​படி பாகிஸ்​தான் போர் விமானங்களுக்கு தேவை​யான உதிரி பாகங்​கள், தொழில்​நுட்பங்கள் வழங்​கப்பட உள்​ளன.

குறிப்​பாக எதிரி​களின் ரேடார்​களில் இருந்து தப்​பிக்க உதவும் சிறப்பு கருவி​கள் பாகிஸ்தானின் எப்16 போர் விமானங்​களில் பொருத்​தப்பட உள்​ளன. இது தொடர்​பான வரைவு அறிக்கை கடந்த 8-ம் தேதி அமெரிக்க நாடாளு​மன்​றத்​தில் தாக்​கல் செய்யப்பட்​டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here