தமிழக கோயில்களில் இருந்து கடத்தப்பட்ட நடராஜர், சோமாஸ்கந்தர், சுந்தரர் சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா முடிவு

0
33

தமிழக கோ​யில்​களில் இருந்து கடத்​தப்​பட்ட நடராஜர் வெண்கல சிலை உட்பட 3 சிலைகளை இந்​தி​யா​விடம் ஒப்​படைக்க அமெரிக்க அருங்​காட்​சி​யகம் ஒப்​புக் கொண்​டுள்​ளது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்​டனில் ‘ஸ்​மித்​சோனியன் தேசிய அருங்​காட்​சி​யகம்’ உள்​ளது. இந்த அருங்​காட்​சி​யகம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

இந்​தி​யா​வின் தமிழகக் கோயில்​களில் இருந்து சட்​ட​விரோத​மாகக் கடத்​தப்​பட்ட 3 வெண்கல சிலைகளை திருப்பி ஒப்​படைக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

கடந்த 10-ம் நூற்​றாண்டை சேர்ந்த ஷிவா நடராஜர் சிலை, 12-ம் நூற்​றாண்டை சேர்ந்த சோமாஸ்​கந்​தர் மற்​றும் 16-ம் நூற்​றாண்டு விஜயநகர காலத்​தைச் சேர்ந்த சுந்​தரர்​-பரவை நாச்​சி​யார் வெண்கல சிலைகள் இந்​தி​யா​விடம் ஒப்​படைக்க முடிவு செய்​யப்​பட்​டது.

இந்த சிலைகள் குறித்து அருங்​காட்​சி​யகம் தீவிர ஆராய்ச்சி செய்​தது. பல்​வேறு ஆவணங்​களை​யும் ஆய்வு செய்​தது.

அப்​போது இந்​தச் சிலைகள் தமிழகக் கோயில்​களில் இருந்து பல ஆண்​டு​களுக்கு முன்​னர் திருடப்​பட்டு கடத்​தப்​பட்​டது உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. எனவே, 3 சிலைகளை இந்​தி​யா​விடம் ஒப்​படைக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

எனினும், இரு நாட்​டின் நட்​புறவு அடிப்​படை​யில், ஷிவா நடராஜர் சிலையை மட்​டும் அருங்​காட்​சி​யகத்​தில் நீண்ட கால அடிப்​படை​யில் தொடர்ந்து காட்​சிப்​படுத்த இந்​தியா அனு​மதி அளித்​துள்​ளது. அந்த சிலையை பற்​றிய முழு விவரங்​களும் அருங்​காட்​சி​யகத்​தில் காட்​சிப்​படுத்​தப்​படும்.

தென் இந்​தி​யா​வின் வெண்கல வார்ப்பு திறன், கலை நுணுக்​கம், புனிதம் போன்​றவற்​றின் எடுத்​துக் காட்​டாக இந்த சிலைகள் அமைந்​துள்​ளன. வழக்​க​மாக இந்த சிலைகள் கோயில் விழா​வின் போது ஊர்​வல​மாக எடுத்​துச் செல்​லப்​படும். இவ்​வாறு அருங்​காட்​சி​யகம் தெரி​வித்​துள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here