உன்னங்குளம்: நுண்ணுயிர் குப்பைக் கிடங்கு  இடமாற்றம்

0
311

குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை ஊராட்சிக்குட்பட்ட உன்னங்குளம் கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  இந்த நிலையில், கிராமத்தில் ஆற்றங்கரை ஓரமாக மூன்று சாலைகள் சந்திக்கும் புறம்போக்கு நிலத்தில் கிராம திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் கழிவு குப்பைகளை தரம் பிரித்து நுண்ணுயிர் உரம் பிரித்தெடுக்கும் வகையில் குப்பைக் கிடங்கு அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் துவங்கியுள்ளது. இதற்காக அவ்விடத்தை சுற்றி கம்பிகள் அமைத்து மேற்கூரைகள் அமைக்கும் பணி நடைபெற்ற நிலையில், நேற்று (18-ம் தேதி) உன்னங்குளம் கிராம மக்கள் குப்பைக் கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து,  போராட்டத்தில் குதிப்போம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து உன்னங்குளம் ஊர் தலைவர் மனோகரன் தலைமையில் இன்று வெள்ளிச்சந்தை ஊராட்சி தலைவர் தாமஸ் கென்னடியை சந்தித்து மக்கள் புகார் அளித்தனர். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அங்கிருந்து குப்பை கிடங்கு கட்டுமானம் அகற்றப்பட்டு அருகே 50 மீட்டர் தூரத்திற்கு அப்பால் மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து அங்கிருந்து குப்பை கிடங்கிற்கான கட்டுமான மேற்கூரைகள், கம்பிகள் அகற்றப்பட்டன. மக்கள் நடமாட்டம் இருந்த பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு குப்பை கிடங்கு மாற்றி நடவடிக்கை மேற்கொண்டதால் மக்கள் நிம்மதியடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here