Home மாநில செய்திகள் சென்னை பல்கலை. முன்னாள் தமிழ்ப்பேராசிரியர் செல்வராசனுக்கு கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது அறிவிப்பு

சென்னை பல்கலை. முன்னாள் தமிழ்ப்பேராசிரியர் செல்வராசனுக்கு கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது அறிவிப்பு

0

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் இந்தாண்டுக்கான கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது சென்னை பல்கலைக்கழக முன்னாள் தமிழ்ப்பேராசிரியர் மா.செல்வராசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் ஆண்டுதோறும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுக்கு சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் மா.செல்வராசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு, இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின், விருதை வழங்கி சிறப்பிக்கிறார். இவ்விருதுடன், ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், வெண்கலத்தாலான மு.கருணாநிதியின் திருவுருவச்சிலையும் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version