அமைதிப் பேச்சுவார்த்தையில் நெருங்கி வரும் உக்ரைன், ரஷ்யா: ட்ரம்ப் தகவல்

0
13

அமைதி பேச்​சு​வார்த்​தைக்கு உக்​ரைனும், ரஷ்​யா​வும் நெருங்​கி​யுள்​ளன. இது சிக்​கலான​தாக இருக்​கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி​யுள்​ளார்.

ரஷ்யா-உக்​ரைன் இடையே அமை​தியை ஏற்​படுத்த அமெரிக்கா பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறது. இந்​நிலை​யில் உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி அமெரிக்கா சென்று புளோரி​டா​வில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்​தித்​துப் பேசி​னார். அதற்கு முன்பாக ரஷ்ய அதிபர் புதினுடன், அதிபர் ட்ரம்ப் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரண்​டரை மணி நேரம் போனில் பேசி​னார்.

இரு தலை​வர்​களு​ட​னும் பேசி​ய பின் ட்ரம்ப் விடுத்த அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: உக்​ரைனும், ரஷ்​யா​வும் அமைதி பேச்​சு​வார்த்​தைக்கு முன் எப்​போதும் இல்​லாத அளவில் நெருங்​கி​யுள்​ளன. போரை முடிவுக்​குக் கொண்​டு ​வரு​வது தொடர்​பாக அதிபர் புதினுடன் நடந்த பேச்​சு​வார்த்தை சிறப்​பாக இருந்​தது. உக்​ரைன் மீது தொடர் தாக்​குதல் நடத்​தி​னாலும், புதின் அமை​தியை விரும்புகிறார்.

அமைதி ஒப்​பந்​தம் கடுமை​யான​தாக இருக்​கும். ஆனால் பிரச்சினைக்கு தீர்வு காணப்​படும் என நம்​பு​கிறேன். ஜெலன்​ஸ்கி தைரிய​மானவர். ரஷ்​யா​வின் தாக்​குதலுக்கு உக்​ரைனும் வலு​வான பதிலடி கொடுக்​கிறது. நான் அதிபர் புதினுடன் மீண்​டும் பேசவுள்ளேன். இன்​னும் சில வாரங்​களில் முடிவு தெரி​யும்” என்றார்.

ட்ரம்பை சந்​தித்​த ​பின் ஜெலன்​ஸ்கி அளித்த பேட்​டி​யில், ”அமைதி பேச்​சு​வார்த்​தைக்கு அதிபர் ட்ரம்ப் மேற்​கொள்​ளும் பணிக்கு நன்றி. அமை​திக்கு உக்​ரைன் தயா​ராக உள்​ளது. அமைதி பேச்சுவார்த்​தைக்​கான 20 அம்ச திட்​டங்​கள் குறித்து ஆலோசித்தோம். இது தொடர்​பாக ஐரோப்​பிய தலை​வர்​களை ட்ரம்ப் சந்​தித்​து பேசவுள்​ளார்​” என்​றார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here