நாகர்கோவில் கோட்டார் டிவிடி காலனி பகுதியைச் சேர்ந்த முத்து (40) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்தார். நேற்று காலை வாகனம் திருடு போனது தெரியவந்தது. அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரண்டு வாலிபர்கள் வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து கோட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.