உலக காசநோய் தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதில் காசநோயை முழுமையாக ஒழிக்கவும், பொதுமக்களிடையே காசநோயை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என டீன் ராமலட்சுமி தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.














