Home தேசிய செய்திகள் திரிணமூல் காங்கிரஸ் பெயர், சின்னம் முடக்கம்: இடைத்தேர்தலுக்கு முன்பாக தேர்தல் ஆணையம் உத்தரவு

திரிணமூல் காங்கிரஸ் பெயர், சின்னம் முடக்கம்: இடைத்தேர்தலுக்கு முன்பாக தேர்தல் ஆணையம் உத்தரவு

0

திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்துள்ள உள்கட்சிப் பிளவை தொடர்ந்து, வரவிருக்கும் மேற்கு வங்க சட்டமன்ற இடைத்தேர்தலில் அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்த இரு தரப்புக்கும் தேர்தல் ஆணையம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2026 மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சியின் தலைமைக்கு எதிராக உள்கட்சி போராட்டம் வெடித்தது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் சுமார் 60 எம்எல்ஏ-க்கள் ஒன்றிணைந்து, எதிர்க்கட்சி தலைவராக தங்களது அங்கீகாரத்தைப் பெற்றனர். அதனைத் தொடர்ந்து ஜூன் மாத இறுதியில், மம்தா பானர்ஜியைத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு அருப் ராயை புதிய தலைவராகக் கிளர்ச்சிப் பிரிவினர் அறிவித்தனர்.

நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இரு பிரிவினரும் திரிணமூல் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்துக்கு உரிமை கோரினர். இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த தேர்தல் ஆணையம், மம்தா பானர்ஜி தலைமையிலான பிரிவோ அல்லது ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான பிரிவோ அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் என்ற பெயரையோ அதன் சின்னத்தையோ பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

மேலும், செப்டம்பர் 18 காலை 11 மணிக்குள் இரு தரப்பும் தங்களின் புதிய அமைப்புகளுக்கான மூன்று மாற்றுப் பெயர்கள் மற்றும் மூன்று சுயேச்சை சின்னங்களின் விருப்பப் பட்டியலைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய பெயர்களில் அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் என்ற பெயர் இடம்பெற விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version