கன்னியாகுமரி மாவட்டத்தில் இரட்டை ரயில் பாதை பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், நுள்ளிவிளை பகுதியில் உள்ள பழைய ரயில்வே மேம்பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் அமைக்கும் பணி நாளை தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ரயில்வே துறை செய்து வருகிறது. இந்த பணிகளை ஒட்டி, திங்கள் சந்தை-நாகர்கோவில் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.














