குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் போக்சோ குற்றங்கள் இல்லாத கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்கும் பொருட்டு “நிமிர்” என்ற போக்சோ சட்ட விழிப்புணர்வு இயக்கத்தை செயல்படுத்தியுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக களியக்காவிளை அருகே வாறுத்தட்டு பள்ளியில் நிமிர் குழுவின் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பெண் காவலர்கள் ஸ்ரீஜா, செலின் மேரி மற்றும் ஞானதீபா ஆகியோர் போக்சோ சட்டம் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும் அதற்கான தண்டனைகள் பற்றியும், போதையினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் மிகச் சிறப்பாக மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்கள்.
            













