தமிழகம் வந்துவிட்டு மேகேதாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் துரோகிகள்: ராகுல்​ மீது திமுக மறைமுக தாக்குதல்

0
31

மாமல்​லபுரத்​தில் சில தினங்​களுக்கு முன்பு நடந்த காங்​கிரஸ் மாவட்ட தலை​வர்​கள் மற்​றும் நிர்​வாகி​கள் பயிற்சி முகாம் நிறைவு விழா​வில், காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல்காந்தி பங்​கேற்​கிறார்.

பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “பாஜக​வின் தொகுதி மறு​வரையறை மசோ​தாவை யார் ஆதரித்​தா​லும், தமிழகத்​துக்கு துரோகம் செய்​கிறவர்​கள்” என்று தெரி​வித்​திருந்​தார்.

இந்​நிலை​யில், திமுக மக்​களவை உறுப்​பினர் தயாநி​தி​மாறன் எக்ஸ் வலை​தளப்​ப​தி​வில், “நம்​பிக்​கையை விற்​று, பதவியை வாங்​கும் நச்​சுப்​பாம்​பு​கள். தமிழகத்​துக்கு வந்​து​விட்டு காவிரி உரிமை​கள் குறித்து பேசாமல் இருப்​பவர்கள் துரோகி​கள்.

காவிரி​யில் தமிழகத்​தின் உரிமையை காவுவாங்​கும் மேகே​தாட்​டுக்கு எதிர்ப்பு தெரிவிக்​காதவர்​கள் துரோகி​கள். நீட் தேர்வு முறையையே ரத்து செய்ய வேண்​டும் என்று வலி​யுறுத்​தாமல், தேர்​வில் முறை​கேடு நடப்​ப​தாக மட்​டும் பேசுகிறவர்​கள் துரோகி​கள்.

பாஜக​வின் குதிரை பேரங்​களை கண்​டிக்​கிறவர்​கள், தவெக​வின் குதிரை பேரங்​களை கண்​டு​கொள்​ளாமல் இருப்​பதும் துரோகத்​தின் தொடர்ச்​சி​யே.

தமிழகத்​துக்கு வந்து ஒரு​வர் அரசி​யல் பாடம் எடுத்​ததை படித்த போது, இதெல்​லாம் வரிசை​யாக நினை​வுக்கு வந்​தது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here