தூத்தூர்: ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்த ஆர்ப்பாட்டம்

0
417

நித்திரவிளை அருகில் தூத்தூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. தினமும் நூற்றுக்கு அதிகமான வெளி நோயாளிகள் வந்து செல்வது வழக்கம்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு குமரி மாவட்டத்தில் அதிகமான பிரசவம் நடந்ததற்கான சான்றிதழ்களும் இந்த சுகாதார நிலையத்திற்கு  கிடைத்தது. எனவே இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தர உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இடம் பற்றாக்குறை காரணமாக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தூத்தூர் மீனவ கிராமத்திலிருந்து அரசுக்கு மூன்று ஏக்கர் நிலம்  வழங்கப்பட்டது.

ஆனால் அரசு ஆரம்ப சுகாதார  மையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்தாமல் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றப்பட்டது. இதனால் அவசர தேவைக்கு பொதுமக்கள் குழித்துறை அரசு மருத்துவமனை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, தூத்தூர் பஸ் நிலையம் முன்பு தூத்தூர் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. அறக்கட்டளை தலைவர் பாபு தலைமை வகித்தார். எழுத்தாளர் இரயுமன் சாகர், தமிழக வாழ்வுரிமை கட்சியின் கிள்ளியூர் தொகுதி பொறுப்பாளர் பிரானேஷ், பூத்துறை இந்து அறையர் சமுதாய தலைவர் ராஜன், போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜோஸ் பில்வின் உட்பட பலர் கலந்து கொண்டு கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here