தூத்தூர் புனித யூதா கல்லூரியில் குமரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் நிறைவு விளையாட்டு போட்டிகள் நேற்று (21-ம் தேதி) நடந்தன.
விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஜூட் தேவ் தலைமை வகித்தார். இதில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. குமரி மாவட்டத்தை சேர்ந்த 10 பள்ளிகள் பங்கெடுத்தன. இறுதிப்போட்டியில் மார்த்தாண்டன்துறை புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியும், பயஸ் மேல்நிலைப்பள்ளியும் மோதின.
இதில் மார்த்தாண்டன் துறை அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்றது. இரண்டாம் இடம் பயஸ் மேல்நிலைப்பள்ளி, மூன்றாம் இடத்தை குளச்சல் புனித மேரி மேல்நிலைப்பள்ளியும் பிடித்தது. முடிவில் மனோ தங்கராஜ் எம் எல் ஏ வெற்றி பெற்ற அணிகளுக்கு கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கிள்ளியூர் ஒன்றிய திமுக பொருளாளர் ததேயுபிரேம் குமார் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.














