திருவட்டாறு ஆதி கேசவ பெருமாள் திருக்கோவில் புண்ணிய தீர்த்தங்கள் பராமரிப்பு பக்தர்கள் அறக்கட்டளை சார்பில், ரோகிணி நட்சத்திரத்தையொட்டி பரளியாற்றில் மகா தீப ஆரத்தி நேற்று இரவு நடைபெற்றது. பாபு தலைமை வகிக்க, அகில பாரதிய சன்னியாசிகள் புரவலர் குழு தலைவர் காமராஜ் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பரவசமடைந்தனர்.














