திருவட்டாறு அருகே வீயன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் மத்தியாஸ் மகன் சிபி (27) எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் முடித்துவிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி சிபி விடுமுறையில் ஊருக்கு வந்தார். அப்போது தந்தையிடம் தான் படித்த படிப்புக்கேற்ற வேலை சம்பளம் கிடைக்கவில்லை என்று புலம்பியதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு சிபி சாப்பிட்டுவிட்டு மாடியில் உள்ள அறைக்குத் துங்கச் சென்றார். நேற்று காலை சர்ச்சுக்குச் செல்வதற்காக சிபியின் தாயார் மாடியில் உள்ள அறைக்குச் சென்று எழுப்பப் போனபோது வீட்டில் தூக்குப்போட்டுத் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதையடுத்து குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறினர். திருவட்டாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.














