Home கன்னியாகுமரி செய்திகள் திருவட்டாறு: கொட்டும் மழையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

திருவட்டாறு: கொட்டும் மழையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

0

திருவட்டாறு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய பாஜக அரசை கண்டித்து நேற்று மாலை திருவட்டாறு பேருந்து நிலையம் முன்பு கொட்டும் மழையில் பாத யாத்திரை மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் வக்கீல் ஜெபா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், விஜய் வசந்த் எம்.பி. மகாத்மா காந்தி உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பாதயாத்திரையை துவக்கி வைத்தார். அப்போது அவர், “பாஜக அரசை தூக்கி எறிவோம், 2029-ல் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவோம்” என பேசினார். குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் டாக்டர். பினுலால் சிங் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version