திருவட்டார் பேரூராட்சிக்குட்பட்ட பாரதப் பள்ளி மற்றும் வெள்ளாங்கோடு பகுதிகளை இணைக்கும் 15 ஆண்டுகளாக பழுதடைந்திருந்த சாலை, அமைச்சர் மனோ தங்கராஜ் ஜூன் மாதம் பணியைத் துவக்கி வைத்த நிலையில், நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. பேரூராட்சி தலைவர் பெனி லா ரமேஷ் சாலையை திறந்து வைத்தார். இதனால் அப்பகுதி மக்களின் நீண்டகால பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.