திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் ஆடி மாதம் முதல் நாளான நேற்று பெருமாளுக்கு பலாக்காயும், கஞ்சியும் நிவேத்யமாக படைக்கப்பட்டது. 2-ம் நாள் பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் ஆதிகேசவபெருமாளுக்கு படைக்கும் பெருந்தமிர்து பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் வரை பெருந்தமிர்து சிறப்பு பூஜை நடக்கிறது. முன்னதாக 49 கலசங்களில் புனிதநீர் நிறைக்கப்பட்டு கலசபூஜை, கலசாபிஷேகம் நடக்கிறது. கோவில் தந்திரி கோகுல் கலசபூஜை மற்றும் பெருந்தமிர்து பூஜைகளை நடத்துகிறார்.