திருவட்டார் பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரி மைக்கேல் ராஜ் (42), கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த தனது மனைவி பியூலா மேரி (37) மற்றும் மாமியாரை நேற்று (செப்.22) கழுத்தில் வெட்டினார். சென்னையில் பணிபுரியும் பியூலா மேரி ஊருக்கு வந்திருந்த நிலையில், மாமியார் வீட்டிற்கு சென்ற மைக்கேல் ராஜ் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டார். திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.