திருவட்டார் வட்டத்துக்குட்பட்ட தோட்டமலை மற்றும் எட்டாங்குன்று மலைவாழ் பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ. 1.49 கோடி மதிப்பில் 33 வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இந்த கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது திருவட்டார் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ் குமார், உதவி பொறியாளர் ஜினு ஆன்றனி, ஒன்றிய மேற்பார்வையாளர் ஜோஸ் பிராங்கிளின் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உடனிருந்தனர்.