திற்பரப்பு மகாதேவர் கோயில் பழமையான கோவிலாகும். இந்த கோவில் சொத்துக்களை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து வைத்திருப்பதாக எழுந்த புகாரின் பேரில் அறநிலையத்துறை அதிகாரிகள் அளவீடு செய்ய வந்தனர். அப்போது எதிர்ப்பு காரணமாக எல்லை நிர்ணயம் செய்ய முடியாமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். இதைக் கண்டித்தும், உடனடியாக அரசு ஆவணப்படி நிலத்தை உடனடி அளக்க கேட்டும், இந்து முன்னணி சார்பில் நேற்று (ஜூலை 27) மாலையில் திற்பரப்பு சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவட்டாறு ஒன்றிய இந்து முன்னணி தலைவர் ஐயப்பன் தலைமை வகித்தார். மேலும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.