திற்பரப்பு: அருவியல் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

0
31

குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக கோதையாறு, பரளியாறு போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 2 நாட்களுக்குப் பிறகு தற்போது சுற்றுலாப் பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். விடுமுறை காலம் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here