திக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஜஸ்டஸ் குமார் (49) என்பவர், தனது நண்பருடன் தாமிரபரணி ஆற்றில் சிப்பி எடுக்கச் சென்றபோது நீரில் மாயமானார். இது குறித்து குழித்துறை தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் நேற்று மாலை 4 மணியளவில் ஜஸ்டஸ் குமாரின் உடலை புல் செடிகளுக்கு இடையே சிக்கிய நிலையில் மீட்டனர். மார்த்தாண்டம் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














