பிப்​.27-ல் ‘தெறி’ மறு​வெளி​யீடு

0
29

விஜய், சமந்தா, எமி ஜாக்​சன் நடித்து 2016-ம் ஆண்டு வெளியான திரைப்​படம் ‘தெறி’. கலைப்​புலி எஸ். தாணு தயாரித்த இப்​படம் சிறந்த வெற்​றியைப் பெற்​றது. இந்நிலை​யில் விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படம் தணிக்கை பிரச்​சினை​யில் இருப்​ப​தால் ‘தெறி’ படத்​தைப் பொங்கலன்று மறு வெளி​யீடு செய்ய தாணு முடிவு செய்திருந்தார்.

சில பிரச்​சினை​கள் காரண​மாக அப்​படத்​தின் வெளியீட்டுத் தேதியை ஜன.23-ம் தேதிக்கு மாற்​று​வ​தாக அறி​வித்​திருந்​தார். பின்​னர் அதே தேதி​யில் ‘திர​வுபதி 2’, ‘ஹாட் ஸ்பாட் 2’ ஆகிய படங்​கள் வெளி​யான​தால், ‘தெறி’ வெளி​யீட்​டுத் தேதி​யைத் தள்ளி வைக்க வேண்​டும் என்று கோரிக்கை வைக்​கப்​பட்​டது. அதனால், தள்ளி வைக்கப்பட்​டது. இந்​நிலை​யில் இப்​படம் பிப்​.27-ம் தேதி வெளி​யாக இருப்​ப​தாக கலைப்​புலி எஸ்​.​தாணு தெரிவித்துள்​ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here