ஹைதராபாத்தில் டிசம்பருக்குள் டீசல் பேருந்துகள் இருக்காது: தெலங்கானா முதல்வர் தகவல்

0
16

வரும் டிசம்பருக்குள் ஹைதராபாத்தில் டீசல் பேருந்துகள் இருக்காது என தெலங்கானா முதல்​வர் ரேவந்த் தெரி​வித்​துள்​ளார்.

சர்​வ​தேச பெண்​கள் தினத்தை முன்​னிட்​டு, பெண் பத்திரிகையாளர்​கள் சந்​திப்பு நிகழ்ச்​சி​யில் தெலங்​கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசி​ய​தாவது: கல்​லூரி மாணவர்​களுக்கு மின்​சார ஸ்கூட்​டர்​கள் வழங்​கப்​படும் என தேர்​தல் வாக்​குறு​தி​யில் கூறி​யிருந்​தோம். அது இந்த நிதி​யாண்​டில் சாத்​தி​யம் இல்​லை. ஆனால், இத்​திட்​டம் அரசின் பரிசீலனை​யில் உள்​ளது.

ஹைத​ரா​பாத் நகரை மாசற்ற நகர​மாக மாற்ற, இங்கு ஓடும் 2,800 டீசல் பேருந்​துகளுக்கு பதிலாக மின்​சார ஏ.சி பேருந்​துகள் மாற்றப்​பட்டு வரு​கின்​றன. இந்​தாண்டு டிசம்​பர் 9-ம் தேதிக்​குள், ஹைத​ரா​பாத்​தில் டீசல் பேருந்​துகள் இருக்​காது.

2 லட்​சம் டீசல் ஆட்​டோக்​களுக்கு மாற்​றாக மின்​சார வாக​னங்​கள் அறி​முகம் செய்​யப்​படும். மின்​சார வாக​னங்​களுக்கு தெலங்​கானா அரசு வரி விதிப்​ப​தில்​லை. ஹைதர​பாத்​தில் ஒரு முறை பயன்​படுத்​தப்​படும் பிளாஸ்​டிக்​குக்கு தடை விதிப்​பது பற்றி பரிசீலிக்​கப்​படும்.

நகரத்​துக்​குள் இயங்​கும் சுற்​றுச்​சூழல் மாசு ஏற்​படுத்​தும் தொழிற்​சாலைகள் வெளி​யிடங்​களுக்கு மாற்​றப்​படும். மும்​பை, பெங்களூரு, சென்​னை போன்ற நகரங்​களில் மழைக்​ காலங்களில் வெள்​ளம், போக்​கு​வரத்து நெரிசல், மாசு அதி​கரிப்பு போன்ற பிரச்​சினை​கள் உள்​ளன.

ஆனால், அது போன்ற பிரச்சினை​கள் ஹைத​ரா​பாத்​தில் இல்​லை. டோக்​கியோ மற்​றும் சிங்​கப்​பூர் போல் மாசற்ற நகர​மாக ஹைத​ரா​பாத்தை மாற்ற காங்​கிரஸ் அரசு விரும்​பு​கிறது. இவ்​​வாறு அவர் கூறி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here