Home விளையாட்டு செய்திகள் ஐபிஎல் மினி ஏலத்தில் ஷாய் ஹோப்பை எடுக்க போட்டி இருக்கும்: கெவின் பீட்டர்சன் கணிப்பு

ஐபிஎல் மினி ஏலத்தில் ஷாய் ஹோப்பை எடுக்க போட்டி இருக்கும்: கெவின் பீட்டர்சன் கணிப்பு

0

ஷாய் ஹோப்பை ஐபிஎல் மினி ஏலத்தில் எடுக்க கடும் போட்டி இருக்கும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தற்போது ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

ராஞ்சியில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு இந்திய அணி 250 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இந்த இலக்கை மேற்கு இந்தியத் தீவுகள் அணி எட்டி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அந்த அணியின் கேப்டன் ஷாய் ஹோப் அமைந்தார். தொடக்க வீரராக களம் இறங்கிய ஷாய் ஹோப் 45 பந்துகளில் 102 ரன் (6 பவுண்டரி, 9 சிக்ஸர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். லக்னோவில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்திலும் அவர் 52 ரன்கள் எடுத்தார்.

இதுதொடர்பாக கெவின் பீட்டர்சன் கூறியதாவது: ஐபிஎல் மினி ஏலம் இந்த ஆண்டு இறு​தி​யில் நடை​பெறும் என நினைக்​கிறேன்.

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யின் கேப்​டன் ஷாய் ஹோப் தனது பெயரை ஐபிஎல் ஏலத்​தில் பதிவு செய்​தால் அவரை ஏலத்​தில் எடுப்​ப​தற்கு கடும் போட்டி இருக்​கும் என்று எதிர்​பார்க்​கிறேன்.

இந்​தி​யா​வுக்கு எதி​ரான தொடரில் அவர் மிகச்​சிறப்​பாக விளை​யாடி வரு​கிறார். குறிப்​பாக 2-வது டி20 ஆட்​டத்​தில் அவர் எடுத்த சதம் மிக​வும் அபார​மானது. மிகச்​சிறந்த இன்​னிங்ஸை அவர் அன்று விளை​யாடி​னார். அதனால் அவரை மினி ஏலத்​தில் எடுப்​ப​தற்கு அனைவரும் விரும்புவர். இவ்வாறு கெவின் பீட்டர்சன் தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version