Home விளையாட்டு செய்திகள் “கிரிக்கெட் விளையாட்டு மிகவும் புதுமையானதாக மாறியுள்ளது” – சொல்கிறார் சுரேஷ் ரெய்னா

“கிரிக்கெட் விளையாட்டு மிகவும் புதுமையானதாக மாறியுள்ளது” – சொல்கிறார் சுரேஷ் ரெய்னா

0

வித்​தி​யாச​மான ஸ்டைல்​களை பேட்​ஸ்​மேன்​கள் கொண்டு வரு​வ​தால் கிரிக்​கெட் விளை​யாட்டு மிக​வும் புது​மை​யான​தாக மாறி​யுள்​ளது என்று இந்​திய கிரிக்​கெட் அணி முன்​னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரி​வித்​துள்​ளார்.

இந்​திய சாஃப்ட்​பால் கிரிக்​கெட் போட்​டியை டெல்​லி​யில் நேற்று சுரேஷ் ரெய்னா தொடங்​கி​வைத்​தார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது:

இந்​திய கிரிக்​கெட் வீரர்​கள் தங்​களது வித்​தி​யாச​மான பேட்​டிங் பாணி​களை களத்​தில் செயல்​படுத்​துகின் றனர். அவர்​களது பேட்​டிங் செயல்​பாடு​கள் பல் வேறு வித்​தி​யாசங்​களை உள்​ளடக்​கி​யுள்​ளன. இதனால் கிரிக்​கெட் மிக​வும் புது​மை​யான விஷய​மாக மாறி​யுள்​ளது.

இந்​திய ஒரு​நாள் அணி​யின் கேப்​டன் ஷுப்​மன் கில் வித்​தி​யாச​மான பாணி​யில் விளை​யாடு​கிறார். அதே​போல் அதிரடி வீரர்​கள் ரோஹித் சர்​மா, விராட் ஆகியோர் 50 ஓவர் போட்​டிகளில் வித்​தி​யாச​மாக விளை​யாடு​கின்​றனர். களத்​தில் பல்​வேறு வித்​தி​யாச​மான பாணி​களை இவர்​கள் கடைப்​பிடிக்​கின்​றனர்.

இப்​போது நம்​மிடம் ஏராள​மான பயிற்​சி​யாளர்​கள் இருப்​பது நமது அதிர்​ஷ்டம்.

வித்​தி​யாச​மான, அச்​சமற்ற கிரிக்​கெட்டை விளை​யாடும் பல வீரர்​கள் நம்​மிடம் உள்​ளனர். அவர்​கள் அற்​புத​மாக விளை யாடி, அழுத்​தத்தை சிறப்​பாகக் கையாளுகின்​றனர்.

போட்​டி​யின்​போது அனை​வரும் வலு​வான பங்​களிப்பை அளிப்​ப​தைப் பார்ப்​பது மிக​வும் மகிழ்ச்​சி​யாக இருக்​கிறது.

இந்​திய அணிக்கு மீண்​டும் திரும்​பி​யுள்ள புவனேஸ்​வர் குமாருக்கு எனது வாழ்த்​துகள். சமீப கால​மாக அவர் சிறப்​பாகச் செயல்​பட்​டுள்​ளார். அவர் உள்​நாட்டு கிரிக்​கெட்​டில் அரு​மை​யாக விளை​யாடி​யுள்​ளார். அவரது கடின உழைப்​பு, விடாமுயற்​சி​யால் மீண்​டும் அவருக்கு இந்​திய அணி​யில் இடம் கிடைத்​துள்​ளது.

36 வயதி​லும் அவர் தனது மன உறு​தியை வெளிப்​படுத்தி விளை​யாடி வரு​கிறார். அவர் மிக​வும் ஒழுக்​க​மான பந்​து​வீச்​சாள​ராகத் திகழ்​கிறார். செயல்​முறை​களுக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​கும் நபராக அவர் இருக்​கிறார். தனது உடற்​தகு​திக்​காக அவர் கடுமை​யாக உழைத்​துள்​ளார். நியூஸிலாந்து சுற்​றுப்​பயணத்​தின்​போது அவர் சிறப்​பாகச் செயல்​படு​வார் என்று நம்​பு​கிறேன்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version