Home விளையாட்டு செய்திகள் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: 3-வது சுற்றும் டிராவில் முடிந்தது

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: 3-வது சுற்றும் டிராவில் முடிந்தது

0

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷை, உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தரோவ் எதிர்த்து விளையாடி வருகிறார்.

2 சுற்றுகள் டிராவில் முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் 3-வது சுற்று நடைபெற்றது. கருப்பு காய்களுடன் விளையாடிய குகேஷ் தொடக்கத்திலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நேரக்கட்டுப்பாடடிலும் முன்னிலை பெற்றார்.

அதேவேளையில் ஒரு கட்டத்தில் சிந்தரோவ் நேர நெருக்கடியில் சிக்கினார். இருப்பினும், சிறப்பாகத் தற்காத்துக் கொண்டார். 5 மணி நேரம் நடைபெற்ற இந்த மோதல் 60-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. 3 சுற்றுகளின் முடிவில் இருவரும் தலா 1.5 புள்ளிகளுடன் உள்ளனர். இன்று 4-வது சுற்று நடைபெறுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version