பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் அவ்வப்போது போரில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த மாதம் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கத்தார் நாட்டில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையின்படி தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது.
அடுத்த கட்டமாக துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் கடந்த சில நாட்களாக இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் இரு நாடுகள் இடையே மீண்டும் போர் மூளும் என்று அஞ்சப்படுகிறது.














