ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு பகுதியில் புதுப்பிக்கப்பட்ட தாமோதர கிருஷ்ணன் கோபுர வழியை அமைச்சர் திறந்து வைத்தார்

0
57

ஸ்ரீரங்​கம் ரங்​க​நாதர் கோயி​லின் கிழக்கு பகு​தி​யில் உள்ள புதுப்​பிக்​கப்​பட்ட தாமோதர கிருஷ்ணன் கோபுர வழிப் பாதையை பொது​மக்​கள் பயன்​பாட்​டுக்கு நேற்று அமைச்​சர் ரமேஷ் திறந்​து​வைத்​தார்.

பின்​னர் அவர் செய்​தி​யாளர்களிடம் கூறியது: ஸ்ரீரங்கம் ரங்​க​நாதர் கோயி​லில் 21 கோபுரங்​களில் ஒன்​றான தாமோதர கிருஷ்ணன் கோபுரத்​தின் மராமத்துபணி​கள் 2023-ல் தொடங்​கி, தற்​போது பணி​கள் முடிந்து மக்கள்பயன்​பாட்​டுக்​காக திறக்​கப்​பட்​டுள்​ளன. பல்வேறு சட்​டப் போராட்டங்​கள் மூலம் பழநி கோயில் நிலத்தை மீட்​டுள்​ளோம்.

கடந்த ஆட்​சிக்​காலத்​தில் மதுரை மீனாட்சி அம்​மன் கோயில் அறக்​கட்​டளைக்கு சொந்​த​மான நிலம் தனி​நபர்​களுக்கு அதி​கார மாற்​றம் செய்​யப்​பட்​டு, பத்​திரப்​ப​திவு செய்​வதற்​கான முயற்சி நடை​பெற்​றது. தற்​போது தவெக ஆட்​சி​யில் கோயில் நிலத்தை விற்​றவர்​கள், வாங்​கிய​வர்​கள் என 19 பேர் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்​துள்​ளது.கோயில் சொத்​துகளாக இருந்​தா​லும், கோயிலுக்கு கொடுக்​கப்​பட்ட அறக்​கட்​டளை சொத்​துகளாக இருந்​தா​லும் இந்து சமய அறநிலை​யத் துறை​யால் காப்​பாற்​றப்​படும்.

பட்​ஜெட் கூட்​டத்​தொடரில் கோயில் பணி​கள் மற்​றும் கோயில்​களுக்கு வழங்க வேண்​டிய நிதி மற்​றும் குளங்​கள் சீரமைப்பு குறித்த அறி​விப்​பு​கள் வெளி​யிடப்​படும். ஸ்ரீரங்​கம் அடிமனை பிரச்​சினை தொடர்​பாக சட்ட வல்​லுநர்​களிடம் ஆலோ​சனை செய்​து, உரிய முன்​னெடுப்​பு​கள் நிச்​சய​மாக எடுக்​கப்​படும். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​. இந்நிகழ்வில் ஆட்சியர் பிரத்திக் தாயள், உபயதாரர் வி.எஸ்.ஜெயபால், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here