முல்தான்: பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று தொடங்கவுள்ளது. முல்தானில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி கண்டு 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் முல்தான் மைதானத்தில் 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது இங்கிலாந்து. அந்த அணியின் ஜோ ரூட், ஹாரி புரூக் ஆகியோர் முதல் டெஸ்டில் அபாரமாக விளையாடி சதம் விளாசினர். இந்தப் போட்டியிலும் அவர்களது ஆதிக்கம் தொடரும் என்று கூறலாம்.
அதே நேரத்தில் 2-வது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் நோக்கில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடுவர் என்பதில் சந்தேகமில்லை.
அணிகள் விவரம் – இங்கிலாந்து: பென் ஸ்டோக்ஸ், ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், பிரைடன் கார்ஸ், மேத்யூ பாட்ஸ், ஜேக் லீச், ஷோயிப் பஷீர்.
பாகிஸ்தான்: ஷான் மசூத் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சயீம் அயூப், அப்துல்லா ஷபீக், முகமது ஹுராயிரா, சவுத் ஷகீல், சல்மான் ஆகா, அமீர் ஜமால், மெஹ்ரான் மும்தாஜ், சஜித் கான், முகமது அலி, கம்ரான் குலாம், நோமன் அலி, ஜாகித் மஹ்மூத், ஹசிபுல்லா, மீர் ஹம்சா.