தக்கலை அருகே வாள்வச்சகோஷ்டம் பகுதியைச் சேர்ந்த சுபின் (30) என்பவர் மீது 2021ல் தக்கலை காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 2023 முதல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த சுபினுக்கு மாஜிஸ்திரேட் கைது வாரண்ட் பிறப்பித்தார். நேற்று தக்கலை போலீசார் காட்டாத்துறை பகுதியில் வைத்து அவரை கைது செய்தனர்.














