தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் மனைவி ருக்மணி (67) நேற்று இவர் திருவட்டாறு செல்லும் பஸ்ஸில் இரவிபுதூர் கடை பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ்ஸில் ஏறினார். இந்த பஸ் தானியங்கி கதவு பொருத்தப்பட்டது ஆகும்.
ருக்மணி பஸ்ஸில் ஏறி உள்ளே செல்வதற்குள் டிரைவர் தானியங்கி கதவு மூடுவதற்கான பொத்தானை அழுத்தியுள்ளார். இதில் கதவு மூடியதால் ருக்மணி வலது கை கதவில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். ருக்மணி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தக்கலை போலீசார் அரசு பஸ் டிரைவர் இயேசுராஜன் (50) என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.